ப்ளெடி பெக்கர் படத்தினால் நெல்சனுக்கு இந்த நிலையா ?
Nov 14, 2024, 06:05 IST
'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் கடைசியாக ஒரு படத்தினை தயாரித்துள்ளார்.
தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தி தனது நண்பரான கவினை நாயகனாக்கி 'பிளடி பெக்கர்' படத்தைத் தயாரித்தார். படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் நெல்சன் ஆனால், தீபாவளி போட்டியில் வெளிவந்த 'அமரன் படத்துடன் போட்டி போட முடியாமல், படமும் மிகச் சுமாராக இருந்ததால் தோல்வியைத் தழுவியது.
நெல்சனை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது தன்னை நம்பி படத்தை வாங்கிய அவர்களுக்கு நஷ்டத் தொகை தருவதாக நெல்சன் முடிவெடுத்திருக்கிறாராம். தொடர்ந்து அடுத்து படம் தயாரிப்பாரா அல்லது ஜெயிலர் 2 திரைப்படம் இயக்குவாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.