ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு இந்த நிலையா ? தெறித்து ஓடிய தயாரிப்பு நிறுவனம்..!

 
1
தனி ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் இன்றுவரையிலும் பேசப்படுகிறது. எனவே இதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் மோகன் ராஜா. அதன்படி இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் ஜெயம் ரவிக்கு வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

'தனி ஒருவன் 2' பட்ஜெட் கேட்டு தெறித்து ஓடிய தயாரிப்பு நிறுவனம்..... தள்ளிவைக்கப்படும் படப்பிடிப்பு!

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போது மோகன் ராஜா, தனி ஒருவன் 2 படத்திற்கான பட்ஜெட் 120 கோடி என்று சொன்னாராம். இதைக்கேட்ட தயாரிப்பு நிறுவனம் ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவரின் தற்போதைய மார்க்கெட் படி இது அதிகமான பட்ஜெட் என்பதால் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

எனவே மோகன் ராஜா இதற்கிடையில் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இருப்பினும் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் யார் ஹீரோ? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From Around the web