இது தான் விடுதலை 2 படத்தின் கிளைமாக்ஸா..? இணையத்தில் லீக்..! 

 
1

விடுதலை படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் தனது காதலியை போலீஸ் நிர்வாணப்படுத்தி அடிக்கும் கொடுமையில் இருந்து காப்பாற்ற விஜய்சேதுபதியை சூரி பிடித்துக் கொடுப்பார்.அதன், பின்னர் தான் பெருமாள் வாத்தியார் பற்றியும் அவர் ஏன் மக்கள் படையை உருவாக்கினார் என்பதை சூரி அறிந்து கொண்டு அவரை ஃபாலோ செய்ய ஆரம்பிப்பார் என்பது முதல் பாதியின் கிளைமேக்ஸிலேயே காட்டி விட்டனர்.

இந்நிலையில், விடுதலை 2 கிளைமேக்ஸில் பெருமாள் வாத்தியாரை சுட சூரிக்கு ஆர்டர் கொடுக்கப்படும் என்றும், அவர் முடியவே முடியாது என மறுக்க, உடனடியாக அருகே இருக்கும் இன்னொரு போலீஸ் அநேகமாக சேத்தன் துப்பாக்கியை எடுத்து பெருமாள் வாத்தியாரான விஜய்சேதுபதியை சுட்டுக் கொன்று விடுவார் என்றும் அந்த கோபத்தில் சூரி சக போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு காட்டுக்கு சென்று பெருமாள் வாத்தியாராகவே மாறிவிடுவது தான் விடுதலை 2 படத்தின் கதை என்கின்றனர்.

ஆனால், இதில் நிச்சயம் வெற்றிமாறன் விஷுவல் ட்ரீட் மற்றும் திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்தே எடுத்திருப்பார் என்றும் கிளைமேக்ஸ் கசிய வாய்ப்பே இல்லை என்றும் கதையை படித்து விட்டு இப்படித்தான் இருக்கும் என்கிற யூகத்தை தான் சமூக வலைதளங்களில் சிலர் இப்படி பரப்பி வருகின்றனர் என வெற்றிமாறன் ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

From Around the web