இதுதான் ‘தி கிரேமேன் தனுஷா’..? ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்..!

 
இதுதான் ‘தி கிரேமேன் தனுஷா’..? ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்..!

அமெரிக்காவில் ஹாலிவுட் பட படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்து மிரட்சி ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் வரை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட்டில் கால்பதித்து இந்தியாவையே வியக்க வைத்துவிட்டார். முன்னதாக ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழி கலவையில் உருவான படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

அந்த படத்தின் வாயிலாகவே தற்போது அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரசோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு மிகவும் வலுவான வேடம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் நடிகர் தனுஷ் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

எப்போதும் போல மிக எளிமையான தோற்றத்தில் படக்குழுவைச் சேர்ந்த ஒருவரும் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. படத்தில் தனுஷ் தனுஷாகவே நடிப்பது பல ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 

From Around the web