மாதவன் நடித்த ஜேஜே பட ஹீரோயினா இது..! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா ?

 
1

2003ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ஜேஜே திரைப்படத்தின் மூலம் நடிகை பிரியங்கா கோத்தாரி பிரபலமானார்.இந்த படத்தில் தமிழ் பேசும் மேற்கு வங்கத்து பெண்ணாக நடித்திருப்பார்.

ஆனால் அவர் நிஜத்திலேயே மேற்கு வங்கத்தில் பிறந்தவர். இந்தப் படம் வெளியானபோது இவர் தேவயானி சாயலில் உள்ளார் என பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

தற்போதும் கூட "தேடி தேடி தீர்ப்போமா", "உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே" பாடல்களை கேட்டால் இவரது நினைவு எளிதாக வந்துவிடும்.தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தார். இறுதியாக ஜீவாவின் கட்சேரி ஆரம்பம் படத்தில் "வாடா வாடா பையா" என பாடலுக்கு நடனமாடினார்.

நடிகை பிரியங்கா கோத்தாரி, தொழிலதிபர் பாஸ்கர் பிரகாஷ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு திருமணமான பிறகு அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.இப்போதும் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் பயணித்து வருகின்றார் பிரியங்கா கோத்தாரி. ஜே ஜே படத்தில் அவர் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பது, அந்த படம் அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகளையும் கொடுத்தது.

இந்நிலையில், இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

1

From Around the web