சினிமா பிரபலங்களின் வாழ்க்கையே இப்படி தானா?

 
1

"மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படதின் மூலம் அறிமுகமாகி பின்பு பல படங்களில் ஹிட் கொடுத்துவந்தவர் தான் நடிகர் விவேக்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராளபிரபு என்ற திரைப்படம் கூட பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. எவ்வாறு இருப்பினும் இவர் அண்மையில்  மாரடைப்பினால் உயிரிழந்தது பெரும் இழப்பாகவே இன்று வரைநினைவு கூறப்படுகிறது. அதற்கு காரணம் விவேக் செய்த சமூக பணிகள் தான்.

1 கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற பயணத்தில், அதை முழுமையாக செய்து முடிக்கும் முன்பே விவேக் உயிரிழந்தார். ஆனாலும் அவர் விட்டுச் சென்ற பணியை அவரது மக்கள் சிறப்பாக தொடர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் விவேக்கின் மகளான தேஜஸ்வரி விவேக் என்பவருக்கு  மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தேஜஸ்வினி - சீரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விவேக்கின் கொள்கையை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் போன்றவை வழங்கப்பட்டது.

அதே போல, மகள் மற்றும் மருமகன் இருவரும் திருமணம் முடிந்து மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நட்டு வைத்தனர். 

இந்த நிலையில், ஆடம்பரமே இல்லாமல் நடந்த இந்த திருமணத்தில் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக கொடுத்து இருக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது, விவேக் உயிருடன் இருந்து இருந்தால் தனது மகளின் கல்யாணத்துக்கு அனைவரையும் அழைத்து இருப்பார். ஆனால், அவர் இல்லாததால் அவரது குடும்பத்தினர் யாரையும் அழைக்காமல் திருமணத்தை நடத்திவிட்டனர். சினிமா பிரபலங்களின் வாழ்க்கையே இப்படி தான் என மேலும் கூறியுள்ளார் பயில்வான்.

From Around the web