போட்டியாளர்களின் லிஸ்ட் இதுதான்..?

 
1
பிக்பாஸ்  7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த உலகநாயகன் கமலஹாசன், தனக்கு இருக்கும் படப்பிடிப்புகளின் காரணமாக இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார். அதன் பின்பு அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்று கேள்வி எழுந்தது. அதன் அடிப்படையில் சரத்குமார், சூர்யா, சிம்பு, அரவிந்த்சாமி, மற்றும் நயன்தாரா உட்பட பலரின் பெயர்கள் அடிபட்டன.

இறுதியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் கொண்டு நடத்தப் போவது விஜய் சேதுபதி தான் என்று உறுதியான தகவல்கள் வெளியாகின. அதன் பின்பு மக்கள் செல்வன் என்பதற்கு அமையவே மக்களால் கொடுக்கப்பட்ட கருத்துக்களுடன் அதிரடியாக தயாரானார் விஜய் சேதுபதி.

இதைத் தொடர்ந்து இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்ற உள்ள போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் நாளாந்தம் வெளியானவாறு உள்ளன. ஆனாலும் இதுவரையில் அதிகார்வப்பூர்வமாக வெளியாக இல்லை.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் இதுதான் என தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் வருமாறு.

வெளியான தகவல்களின்படி பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான்.

1. குரேஷி (விஜய் டிவி காமெடியன்)

2. அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்)

3. செந்தில் (காமெடியன்)

4. ஷாலின் ஸோயா (குக் வித் கோமாளி பிரபலம்)

5. ரியாஸ் கான் (நடிகர்)

6. பூனம் பஜ்வா (கவர்ச்சி நடிகை)

7. ஜெகன் (காமெடி நடிகர்)

8. ரஞ்சித் (90ஸ் ஹீரோ, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்)

9. அமலா ஷாஜி (ஆன்லைன் பிரபலம்).

10. சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் புகழ் நடிகை).

11. ப்ரீத்தி முகுந்தன் (கவின் உடன் ஸ்டார் படத்தில் நடித்தவர்)

12. டிடிஎப் வாசன் (பைக் ரைடு சர்ச்சை பிரபலம்).

13. ஜாக்குலின் (விஜய் டிவி முன்னாள் தொகுப்பாளர்)

14. ரவீந்தர் சந்திரசேகர் (தயாரிப்பாளர்)

15. பவித்ரா ஜனனி (சீரியல் நடிகை)

16. அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)

17. வினோத் பாபு (சீரியல் நடிகர்) 

மேலும் தற்போது இவர்களுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சுனிதா பங்கு பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

From Around the web