அடுத்த ஜேம்ஸ்பாண்டு இவர்தானா..? எதிர்பார்ப்பில் உலக ரசிகர்கள்..!

 
ஹென்றி கெவில்

பிரபல ஹாலிவுட் நடிகரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க தயாரிப்பு நிறுவனம் பரிசீலணை செய்து வருகிறது. 

இங்கிலாந்து உளவு அமைப்பான எம்.ஐ. 16 அமைப்பு உலகளவில் பிரசித்திப் பெற்றது. இதை அடிப்படையாக வைத்து ஒரு கதையை எழுதினார் இயான் ஃப்ளெமிங். அதில் ஜேம்ஸ் பாண்டு என்கிற ரகசிய உளவாளியை கதாநாயகனாக முன்னிறுத்தி கதையை அவர் உருவாக்கினார்.

மிகவும் சாகசங்கள் நிறைந்த இந்த கதை வாசகர்களிடையே பிரபலமானது. அதை தொடர்ந்து அது திரைப்படமாக உருவானது. தொடர்ந்து அதே கதாபாத்திரத்தை வைத்து பல்வேறு கதைகளை உருவாக்கினார் இயான் ஃப்ளெமிங்.

அவை அனைத்துமே ஒவ்வொன்றாக திரைப்படங்களாக உருவாக்கப்பட்டன. அந்த படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 25 ஜேம்ஸ்பாண்டு படங்கள் வெளியாகியுள்ளன. அதில் 25-வது படமான ‘நோ டைம் டூ டை’ சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்தது.

தற்போதைய ஜேம்ஸ்பாண்டாக டேனியல் கிரைக் நடித்து வருகிறார். நோ டைம் டூ டை படத்துடன் அவர் இனிமேல் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து புதிய ஜேம்ஸ்பாண்டு நடிகர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதன்படி இத்ரிஸ் எல்பா , டாம் ஹார்டி, ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா  என 5 நடிகர்களின் பெயர் பரிசீலணையில் உள்ளன. இவ்வரிசையில் மற்றொரு பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயரும் சேர்ந்துள்ளது. 

ஏற்கனவே கேசினோ ராயல் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஹென்றி கேவில்லின் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால் டேனியல் கிரைக் அந்த படம் மூலம் ஜேம்ஸ்பாண்டு நடிகராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. 

From Around the web