பிக்பாஸ் டைட்டில் வின்னர் மறைவுக்கு இதுதான் காரணமா..?

 
சித்தார்த் சுக்லா
பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் பிரபல பாலிவுட் நடிகருமான சித்தார்த் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இந்தி தொலைக்காட்சி துறையில் மிகவும் பிரபலமாக இருந்தவர் சித்தார்த் சுக்லா. இவர் இந்தியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆவார். இதனால் அவர் மேலும் பிரபலமாக இருந்தார்.

நாற்பது வயதான சித்தார்த்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சித்தார்த் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருடைய மறைவு பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரையின் முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web