நடிகர் சிவகார்த்திகேயன் லிப் லாக் சீன்ல நடிக்க மாட்டேன்னு சொன்னதற்கு இப்படியொரு காரணமா..?
Jul 12, 2024, 07:05 IST

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன், SK 23 ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். அத்துடன் விஜய் நடிக்கும் கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், சாரி நோ லிப் லாக் என கூறியுள்ளார். அதாவது, நான் நடிக்கும் படங்களில் எந்த நடிகை கூடவும் லிப் லாக் பண்ண மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடியே வீட்டுல சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டுதான் வந்திருக்கேன். எந்த பொண்ணையும் கிஸ் பண்ண மாட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.