ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?

 
1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் அதே நேரத்தில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்று தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் முந்தைய படமான ’அண்ணாத்த’ படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக இருந்த நிலையில் அதைவிட ‘ஜெயிலர்’ திரைப்படம் 13 நிமிடங்கள் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web