நடிகர் செந்திலுக்கு இப்படி ஒரு நிலையா..!

 
1

நடிகர் கவுண்டமணி செந்தில் காம்பினேஷன் அளவிற்கு அதற்குப் பிறகு எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு வரவே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.அதிகப்படியான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தான் எல்லா திரைப்படங்களிலும் அடிவாங்கி கொண்டிருக்கிறோமே என்கிற தாழ்வு மனப்பான்மை செந்தில் இடம் கிடையாது.அதன் காரணமாகவே அவர் சிறந்த இடத்தில் உள்ளார்…

அதுபோல நடிகர் செந்தில் விரைவில் தொடங்கப்பட இருக்கும் கரகாட்டக்காரன் 2 திரைப்படத்தில் நடிப்பேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் இந்த தகவலும் வைரல் ஆகி இருந்தது…ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவருடைய காமெடி இப்போது வரைக்கும் பார்க்கும்போதெல்லாம் பலருக்கும் சிரிப்பு வந்துவிடும். அதுவும் அந்த இன்னொன்னு தானே இது என்று இவர் பேசும் எக்ஸ்பிரஷன் பலருடைய மனக் கவலையை தீர்த்துவிடும்.

இந்த நிலையில் இவர் மீண்டும் நடிக்க இருப்பதால் விரைவில் கரகாட்டக்காரன் 2 தொடங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் செந்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் பலபேரை சிரிக்க வைத்திருக்கிறேன் ஆனால் என்னுடைய வாழ்க்கையிலும் பல போராட்டங்களும் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது என்று அவர் சொல்லியது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நான் கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டி அதை எனக்கு தெரிந்த நடிகர் ஒருவரிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி இருந்தேன்…அவர் அதை இன்னொருவருக்கு மேல் வாடகைக்கு கொடுத்திருக்கிறார் நான்கு வருடமாக அவர் வாடகை தரவில்லை…தண்ணி பில்லு, கரண்டு பில்லு எல்லாவற்றையும் நான்தான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…இப்படி ஒரு மோசமான நிலை தான்…

என்னுடைய இடத்தில் வேற யாராவது இருந்து இருந்தால் ரொம்பவே டென்ஷன் ஆகி இருப்பாங்க. ஆனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் தான் இருக்கிறேன்…முறைப்படி கோர்ட்டு மூலமாக போய், இப்போதுதான் அதற்கு தீர்ப்பு வந்திருக்கிறது…ஆனால் இன்னும் எனக்கு பணம் வரவில்லை என வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் செந்தில்…

From Around the web