இனி இதுதான் கதையா? பாக்கியா வெளியிட்ட போஸ்ட்..!

 
1

பாக்கியலட்சுமி சீரியல் நான்கு வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்திருக்கிறார்கள். சாதாரண ஒரு குடும்ப தலைவி படும் அவமானம், கஷ்டங்கள் பற்றியே இந்த சீரியல் கதை பயணித்து வருகிறது.


அதுபோல இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சதீஷ் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலில் கோபியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இன்றைய எபிசோடை பலரும் பார்த்திருப்பீங்க என்று நினைக்கிறேன். இன்று யாரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடக்கிறது. அதுபோல இன்று 1358 வது எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் அதிகமான எபிசோடுகள் போனது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அதைத் தொடர்ந்து இப்போது பாக்கியலட்சுமி சீரியலும் முன்னேறி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுதான். அதுபோல இன்னும் சிறிது தூரம் இந்த சீரியல் போக வேண்டியது இருக்கு. அதற்கு மக்கள் சப்போர்ட் செய்ய வேண்டும்.இதனால் இந்த சீரியல் குறைந்தபட்சம் 1500 எபிசோடுகள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல சீரியலில் கதாநாயகியாக பாக்கியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் மறக்க முடியாத சில நினைவுகள் என்று அவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

From Around the web