இதெல்லாம் உண்மையா..? முன்னணி நடிகையை சீரழித்த பிரபலம் இவரா?

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை பூனம் கவுர். இவர், தெலுங்கு இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார்.
"த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்ட நாட்களுக்கு முன், தெலுங்கு நடிகர் சங்கத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்த விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கி என் மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் கெடுத்த அவரை முன்னணி திரைத்துறையினர் ஆதரித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த அதிர்ச்சி புகார், மீண்டும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "பூனம் கவுர் தமிழில் பல படங்களில் நடித்தவர்.. தெலுங்கில் முன்னணி நடிகையும்கூட.. இவர் தெலுங்கில் ஒரு இயக்குனரை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் சங்கத்தில் ஒரு புகார் தந்திருந்தார்..
அதில், என்னுடைய வாழ்க்கையை அந்த இயக்குனர் நாசமாக்கிவிட்டார்.. என்னுடைய உடலநலத்தையும் கெடுத்துவிட்டார் . எனவே சம்பந்தப்பட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தார். ஆனால், அந்த புகாரில் எந்த இயக்குனர் என்று பெயரை, அவர் குறிப்பிடவில்லை. எனினும், அவர் தந்த புகாரிலிருந்து, இயக்குனர் ஸ்ரீ விக்ரம் சீனிவாஸ் என்பவரின் பெயரை யூகிக்க முடிந்தது.. இந்த இயக்குனருடன்தான் நடிகை நெருங்கி பழகினார்.. லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்தார்.. தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, ஏமாற்றிவிட்டார், என்னுடைய உடல்நலத்தையும், உள்ளத்தையும் நாசமாக்கிவிட்டார் என்றெல்லாம் மீண்டும் கூறியிருக்கிறார் பிரபல நடிகை பூனம். இதுபற்றி தெலுங்கு நடிகர் சங்க பொருளாளர் ஒரு பேட்டி தந்துள்ளார்..
அதில், "அப்படி ஒரு புகாரே நடிகையிடமிருந்து எங்களுக்கு வரவில்லை.. சும்மா சும்மா இதை பற்றியே பேசி கொண்டிருக்கிறார் பூனம் கவுர்.. இப்படி மீடியாக்கள் முன்பு பேசுவதன் காரணமாக, அவர் தன்னுடைய பெயரை கெடுத்து கொள்கிறார்.. சம்பந்தப்பட்ட இடங்களில், சம்பந்தப்பட்ட சங்கங்களில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் புகார் கொடுப்பதற்கு பதிலாக, மீடியாவில் பேசினால் அது தவறு என்று கூறியிருக்கிறார்" என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்/