இது உண்மையா ? ஹீரோவாகிறார் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..!

 
1

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

vasan

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், வாசன் அடுத்ததாக படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

Vasan

அவரது பிறந்த நாளான வரும் வியாழன் அன்று அவர் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதனால் வாசனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, வாசனின் பட அறிவிப்பு தொடர்பாக மீம்ஸ்களும் வரத் தொடங்கியுள்ளன.

From Around the web