இது உண்மையா ? தளபதி விஜய்யின் ஆரம்பிக்கப்போகும் புதிய நியூஸ் சேனல்..!

 
1

வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் அவருக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், லியோ படத்திலிருந்து வெளியான நா ரெடி தான் வரவா பாடலை விஜய் அரசியல் என்ட்ரீக்கான பாடல் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். அது உண்மை என்பது போல, அம்பேத்கர் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார். 

இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் உண்மை இல்லை என்றும், நியூஸ் சேனல் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web