இது உண்மையா ? குழப்பத்தில் ரசிகர்கள்..! இந்த நடிகை லியோ படத்தில் நடித்துள்ளாராம்..! 

 
1

நடிகர்கள் விக்ரம், அஜித், கமல், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை கிரண். பிரசாந்தின் வின்னர் படத்தில் நடித்த கிரண், அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து விஷாலின் ஆம்பள படத்தில் ஆன்டி கதாபாத்திரத்தில் நடித்து ஷாக் கொடுத்த கிரண் அந்த படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் நடிக்கவே இல்லை.

நடிகை கிரணை பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஏதாவது ஒரு ரூமர் உங்களை பற்றி நீங்களே சொல்லுங்க என்றதும், தமிழ் சினிமாவில் 4 படங்களில் கமிட் ஆகி உள்ளேன் என்று சொல்லி சிரித்த நடிகை கிரண் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் செய்துள்ளேன் என குண்டை தூக்கிப் போட்டுள்ளார். மேலும், நடிகர் விஜய் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு சூப்பர் என ஃபிளையிங் கிஸ் எல்லாம் விஜய்க்கு கொடுத்து விட்டார் கிரண்.

உண்மையாகவே கிரண் லியோ படத்தில் நடித்துள்ளாரா அல்லது அவர் சொன்னது ரூமரா என்பது அந்த தொகுப்பாளருக்கே தெரியாதபடி குழப்பி விட்டுள்ளார் கிரண். திருமலை படத்தில் “வாடியம்மா ஜக்கம்மா” பாடலுக்கு ஆட்டம் போட்டது போல “நான் ரெடி தான்” பாடலில் விஜய்யுடன் கிரண் ஆட்டம் போடுவாரா சர்ப்ரைஸா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

From Around the web