எதற்கும் துணிந்தவன் படத்தின் வில்லன் இந்த இளம் நடிகரா..?
 

 
சூர்யா
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். தற்போது படத்துக்கான ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சரண் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக சரண் நடித்தது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது. அதேபோல இந்த படத்திலும் இவருடைய நடிப்பு கவனமீர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன் பட ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து வந்தது. அடுத்த வாரம் முதல் இதனுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. படத்திற்கான ஷூட்டிங் பணிகள் விரைவில் முடிவடையவுள்ளன.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அருள் மோகன் நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

From Around the web