4வது திருமணம் முடிஞ்சிடுச்சா? வைரலாகும் வனிதா விஜயகுமார் புகைப்படம்! 

 
1

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் பற்றிய செய்திகள் தான் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு செய்தி தான் இப்போதும் வந்திருக்கிறது. அது அவருடைய 4ஆவது திருமணம் பற்றிய செய்தி.

ஏற்கனவே இவருக்கு இரண்டு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்திருக்கிறது.மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் சமூக வலைத்தளத்தில் எவ்வளவோ எதிர்ப்பு கிளம்பினாலும் பீட்டர் பாலோடு சில வாரங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த வனிதா திடீரென்று அவரைப் பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார்.

அதற்குப் பிறகு சில வருடங்களில் பீட்டர் பால் இறந்து போய்விட்டார். இந்த நிலையில் வனிதா அடுத்தது யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று அவரிடம் நிகழ்ச்சிகளில் நேரடியாகவே பிரபலங்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதற்கு வனிதாவும் கூலாக இன்னும் சீக்கிரத்தில் அதற்கு பதில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

வனிதாவின் மகள்கள் அவருடைய தோளுக்கு மேல் வளர்ந்தாலும், தன்னுடைய திருமண வாழ்க்கையில் தனக்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பதில் தான் தவறு செய்து விடுகிறேன் ஆனால் அதிக எதிர்பார்ப்பு வைப்பதால் அது இல்லாத போது ஏமாற்றத்தில் முடிவடைந்து விடுகிறது. என்னுடைய திருமண வாழ்க்கை சரியில்லாமல் போனதற்கு என்னுடைய அப்பாவும் காரணம்.

என்னுடைய அப்பா எல்லாவிதத்திலும் பொறுப்பாகவும், சரியாகவும் இருப்பார். அவரைப் போலவே எனக்கு கணவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அது எனக்கு அமையாததால் தான் திருமண வாழ்க்கை ஏமாற்றத்தில் முடிந்து கொண்டிருக்கிறது என்று ஜாலியாக பேட்டிகளில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் சில வருடங்களாக குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த வனிதா இப்போது கதாநாயகி அவதாரம் எடுத்து இருக்கிறார். அதாவது வனிதாவின் காதலர் என்று சில வருடங்களுக்கு முன்பு பேசப்பட்ட ராபர்ட் மாஸ்டரோடு சேர்ந்து "மிஸ்டர் அண்ட் மிஸஸ்" என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி வைரலானது. நேற்று முன் தினம் நாளை 5:55 மணிக்கு சுப முகூர்த்தம் என்று புதிய போஸ்டர் ஒன்றை அறிவித்திருந்தார். இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை நியூ ஸ்டார் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக வனிதா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவருக்கும் திருமணம் நடக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் உங்களுக்கு அடுத்த திருமணமா? என்று கலாய்த்து வருகிறார்கள்.

அதேபோல பீட்டர் பாலுடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட வனிதா இப்போது ராபர்ட் மாஸ்டர் உடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டாரா? என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதுபோல ராபர்ட் மாஸ்டர் தாலி கட்டும்போது வனிதா கண்கலங்கி அழுது இருக்கிறார். அப்போது ராபர்ட் மாஸ்டர் வனிதாவிற்கு முத்தம் கொடுத்து இருக்கிறார்.

இந்த வீடியோக்களையும் வனிதாவின் மகளான ஜோவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவிற்கு "அருணும் வித்யாவும் என்றென்றும் காதலர் தினமா? சுபமுகூர்த்த பாடல் இப்போது வெளியாகி உள்ளது என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

From Around the web