வரு கணவருக்கு இவ்ளோ பெரிய மகளா..? 

 
1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் . பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரிதளவில் பேசப்பட்டது. இதுமட்டுமின்றி இவரது கைவசம் தற்போது ஏராளமான படங்கள் உள்ளது.

இதற்கிடையில் நடிகை வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலை சச்தேவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அடுத்த மாதம் இவர்களுக்கு ஊரறிய பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் வரலட்சுமி தந்தை சரத்குமார் , வருங்கால கணவர் உளப்பட குடும்பமே வெட்டிங் ஷாப்பிங் செய்ய துபாய்க்கு சென்றுள்ளது .

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தில் இருக்கும் இளம் பெண் யார் என்ற கேள்வி பலருக்கும் அரண் போல் எழும்பி நின்றது. தற்போது அந்த கேள்விக்கு விடையும் கிடைத்துள்ளது.

அந்த இளம் பெண் வேறு யாரும் இல்லை நடிகை வரலக்ஷ்மி திருமணம் செய்ய போகும் அவரது வருங்கால கணவரின் மகள் தானாம் அவரது பெயர் காஷா நியா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

From Around the web