நடிகர் அஜித் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆனது என்பது உண்மை இல்லையா ? 

 
1

அஜித் குழந்தை நட்சத்திரமாக ’என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடித்தார். அதன்படி கணக்கு போட்டால் 33 வருடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஜித் ’அமராவதி’ என்ற திரைப்படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படம் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன்படி கணக்கு போட்டால் 31 வருடம் தான் நிறைவு பெற்றுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க 32 வருடங்கள் நிறைவு பெற்றது எப்படி என்ற கேள்வியை தற்போது நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.



நேற்று விஜய்யின் ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியானதால் தான் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து அஜித் படத்தின் அப்டேட் வெளியாக வேண்டும் என்பதற்காகவே வேண்டும் என்று ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் அப்டேட்டுகள் வந்துள்ளது என்றும் இது ஒரு பெரிய நடிகருக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜித், விஜய் ஆக இருவரும் மாஸ் நடிகர்கள் என்றாலும் அஜித்தை விட ஒரு படி மேலே தான் விஜய் தற்போது உள்ளார். அதனால் தான் அஜித் அவர் மீது ஏற்பட்ட பொறாமை காரணமாக விஜய் படத்தின் அப்டேட் வரும் போது எல்லாம் அஜித் தனது படங்கள் அல்லது தம்பி பற்றிய தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.



ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும் அஜித் முதல் முதலில் கேமரா முன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த நாளை கணக்கில் கொண்டு தான் 32 வருடம் என்று கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் அஜித் இருக்கும் உயரத்துக்கு அவர் யார் மீதும் பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

From Around the web