இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்...விடாமுயற்சியை விளாசிய பிரபலம்..!

மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்தில் அஜித் ஹீரோவாக நடித்தார். முதலில் தனது சொந்த கதையை இயக்கவிருந்த மகிழிடம் அஜித்தான் பிரேக் டவுன் படத்தின் கதையை ரீமேக் செய்ய சொன்னார் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மகிழ் திருமேனியும் படத்தின் ப்ரோமோஷனில் இந்தப் படத்தின் கதை தனது சொந்த கதை இல்லை; திரைக்கதை மட்டும்தான் அமைத்திருக்கிறேன் என்று கூறினார்.
அவர் எப்போதும் திரில்லர் ஜானரில் கிங் என்பதால் அஜித்தை வைத்து தன்னுடைய கதையையே இயக்கியிருக்கலாமே என்று ரசிகர்கள் கூறினார்கள்.அந்த நம்பிக்கையோடு படத்தை பார்க்க நேற்று சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. சாதாரண ஒன் லைனை மிகவும் தட்டையான திரைக்கதையோடு இயக்குநர் கொடுத்துவிட்டாரே என்று நொந்துகொண்டார்கள்.
தமிழ் சினிமாவின் ஓபனிங் கிங் என்கிற பெயரை அஜித் வைத்திருப்பார். இந்தப் படம் அந்தப் பெயருக்கு டேமேஜ் ஏற்படுத்திவிட்டதோ என்றுதான் பலரும் பேசிக்கொள்கிறார்கள். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்தப் படம் குறித்தும், அஜித் குறித்தும் பேசியிருக்கிறார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எப்போதுமே மண் மணம் மாறாத கதைகளோடு ஆடியன்ஸ் கனெக்ட் ஆகிடுவார்கள். வெளிநாட்டில் எடுக்கப்படும் படங்களில் லேண்ட்ஸ்கேப் மாறும், ஆட்கள் மாறுவார்கள். எனவே அந்த நேட்டிவிட்டி இல்லாமல் போய்விடும். உதாரணமாக மெர்சல், பிகில் படங்கள் மண் மணம் மாறாதவை. ஆனால் GOAT, லியோ படங்கள் அந்த வகையை சேர்ந்தது இல்லை. அது மாதிரிதான் விடாமுயற்சி படமும்.
இன்னும் சொல்லப்போனால் விக்னேஷ் சிவனை விட்டிருந்தால் இதைவிட இன்னும் சூப்பராக எடுத்திருப்பார். அவர் அஜித்திடம் முதல் பாதிவரைதான் கதையே சொல்லியிருந்தார். .இரண்டாம் பாதியை சொல்லவில்லை. நயன்தாராவுடன் ஊர் சுற்றவே நேரம் சரியாக இருந்தது. இரண்டாவது பாதியை உருவாக்காமல் இழுத்தடித்ததால்தான் அவரை படத்திலிருந்து தூக்கினார்கள். பேசாமல் விக்னேஷ் சிவன் அவரது கதையை அஜித்தை வைத்து செய்திருந்தால் விடாமுயற்சியைவிடவும் பெட்டராகத்தான் இருந்திருக்கும்" என்றார்.