தீபாவளிக்கு செம ட்ரீட் இருக்கும் போல..! மார்வெலில் மாஸ் காட்டும் நடிகை சமந்தா..!

 
1

கேப்டன் மார்வெல் உள்ளிட்ட மார்வெல் கதாபாத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள பெண்களை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ படம் வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது. இந்நிலையில், அதுதொடர்பான புரமோஷனை தற்போது இந்தியாவில் மார்வெல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

மார்வெலின் தீவிர ரசிகையான நடிகை சமந்தா சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்து வரும் நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு செம ஸ்வாகாக கலந்து கொண்டு கலக்கினார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

கேப்டன் மார்வெல் லீடு ரோலுக்கு நடிகை சமந்தா டப்பிங் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதன் காரணமாக மார்வெல்ஸ் படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு உலகம் முழுவதும் வசூல் வேட்டையை குவிக்கப் போவதாக ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.


 


 

From Around the web