இந்த நேரத்தில் தான் பெமி9 உபயோகித்து நல்ல பலன் கண்டேன் - நயன்தாரா..!

 
1

விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா, தொடர்ந்து அடுத்தடுத்த பிசினஸ்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த பிசினஸ்களை புரமோட் செய்யும் வகையில் அடுத்தடுத்த விளம்பரங்களையும் ஃபோட்டோஸ்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டாக்டர் கோமதி என்பவருடன் இணைந்து நயன்தாரா கடந்த ஜனவரியில் பெமி9 பிராண்டில் சானிடரி நேப்கினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்தி வரும் நயன்தாரா பெண்கள் தங்களுக்கு வசதியான சானிடரி நாப்கினை அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே பெமி9 நேப்கினை ப்ரோமோட் செய்யும் வகையில் தற்போது அழகான புடவையில் போட்டோ சூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆறுதலும் நேசிப்பும் தேவைப்படும் நேரங்களை குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மாதவிடாய் காலங்களில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை சந்திப்பதையும் குறிப்பிட்டுள்ள நயன்தாரா, இந்த நேரத்தில் தான் பெமி9 உபயோகித்து சவுகரியத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உங்களுக்கும் அதை பரிந்துரை செய்கிறேன், இது என்னுடைய தயாரிப்பு தான், ஆனால் அதற்காக மட்டும் நான் இதை கூறவில்லை, நான்  அனுபவித்த சௌகரியங்கள் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

பெண்களுக்கு பிரச்சனை இல்லாத சௌகரியமான மாதவிடாய் சூழல் அமைய இந்த தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் காலத்திலும் மற்ற நாட்கள் போலவே மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

நயன்தாராவின் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. நடிகை நயன்தாரா மாதவிடாய் காலத்தில் அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவை செய்தாரா? அல்லது அவர் தன்னுடைய தயாரிப்பு விற்பனை அதிகரிக்க இந்த பதிவு செய்தாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

From Around the web