இன்னிக்கு கண்டிப்பா வரும்.. வெளியானது ‘கள்வன்’ பட டிரெய்லர்!

 
1

 ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படத்தில் பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4-ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalvan

இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், இவானா, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். கள்வன் படத்தின் டிரெயிலர் காலை 11.30 மணி அளவில் வெளியானது.

படத்தின் டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஊரினுள் யானை நழைந்ததாக தகவல் வருகிறது அதனால் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கின்றனர். அக்காட்டுப் பகுதியில் காவல் நிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. அப்போது கதாநாயகனான ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவன் கூட்டாளியான தீனா காட்டு பகுதிக்குள் காவலுக்காக செல்கின்றனர். அதற்கடுத்து அவர்களுக்கு என்ன ஆனது, காட்டில் இருந்து அவர்கள் எப்படி யானையிடம் இருந்து மீண்டு வந்தனர் என்பதே மீதிக்கதை.

From Around the web