இதெல்லாம் ரொம்ப ஓவர்... சிவகார்த்திகேயனை கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!

 
1

சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது. சாய் பல்லவி கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார். மாவீரன் கொடுத்த ஹிட் வைப்பை இந்தப் படத்திலும் சிவா தொடர்வார் என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

CINEMA NEWS

“இதுக்குத்தான் அந்த குல்லாவா..! சிவகார்த்திகேயனை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!”

By

Published on September 1, 2023

மாவீரன் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே தனது 21ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது. சாய் பல்லவி கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார். மாவீரன் கொடுத்த ஹிட் வைப்பை இந்தப் படத்திலும் சிவா தொடர்வார் என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் படமானது இந்திய ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை தழுவித்தான் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான முதல் ஷெட்யூல் காஷ்மீரில் தொடங்கியது. ஆனால் சில பிரச்னைகளால் தமிழகம் திரும்பியது படக்குழு. இரண்டாவது பக்கா பிளானோடு சென்று 75 நாட்கள் காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்திருக்கிறது SK 21 குழு. இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டான்கின.

வெற்றிகரமாக 75 நாட்கள் ஷூட்டிங் முடிந்ததை சிவாவின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அதேசமயம் அந்தப் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்ஸ் சிலர் கமெண்ட்ஸும் செய்துவருகின்றனர். அவர்கள் சமூக வலைதளங்களில், இந்தப் படத்தில் சிவா கமிட்டானவுடனே தலையில் குல்லாவுடன் தான் சுற்றிக்கொண்டிருந்தார். மாமன்னன், மாவீரன் விழாவுக்குக்கூட இந்த குல்லாவுடன் தான் வந்தார்.

அது ஏன் என்று எல்லோரும் கேட்க SK 21 ஹேர் ஸ்டைல் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதால்தான் இந்த ஏற்பாடு என கூறப்பட்டது. நேற்று வெளியிட்ட SK 21 படக்குழு புகைப்படத்தில் சிவகார்த்திகேயேன் கலர் பொடிகளுக்கு பின்னணியில் இருக்கிறார். அதில் பக்கா மிலிட்டரி கட்டிங்கோடு காட்சியளிக்கிறார் அவர்.

இதனையடுத்து ஏன் சிவா சார் இந்த மிலிட்டரி கட்டிங் ஹேர் ஸ்டைலுக்காகவா ரொம்ப பில்ட் அப் கொடுத்து குல்லா போட்டு சுத்திட்டு இருந்தீங்க. அப்படி ஒன்னும் இதில் வித்தியாசம் இல்லையே சார். இதெல்லாம் ரொம்ப ஓவர் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

 

From Around the web