தீர விசாரித்து நடந்ததே.. விளக்கம் கொடுத்த கமல். பிரதீப் ஆண்டனி போட்ட பதிவு

 
1

கடந்த வாரம் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியேற்றினார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. பலரும் பிரதீப்புக்கு நீதி வேண்டும் என கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த நிலையில் கமல் நேற்றைய எபிசோடில் பிரதீப் வெளியேற்றம் தீர விசாரித்து நடந்ததே, அதுவும் அவருடைய நல்லதுக்காக நடந்ததே என விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து பிரதீப் இது விஷயம் குறித்து கேம் ஓவர் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி பேசிய பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் நிக்சன் வினுஷா பற்றி பேசிய விஷயத்திற்கு அவர் கொடுத்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

வினுஷா இது குறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில் கமல்ஹாசன் நேற்றைய எபிசோட்டில் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் நிச்சயம் இது குறித்து பேசி இருக்க வேண்டும் என ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

From Around the web