போடுற வெடிய.. புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..! 

 
1

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜூன்.இவர் கதாநாயகனாக நடித்து கடந்த 2021ம் ஆண்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. படம் எதிர்பார்த்த அளவில் இல்லையென்றாலும் பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடித்திருந்தது. கூடுதலாக இந்தத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் செய்த சில மேனரிசங்கள் மற்றும் வசனங்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆகின.

இந்தப்படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மற்றும் பகத் பாசிலின் நடிப்பும் கவனம் பெற்றது. படத்திற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகள் நடந்தன. இந்த பாகத்திற்கு ‘புஷ்பா தி ரூல்’ என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.இதனிடையே இந்தப்படத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜூனுக்கும், இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. புஷ்பா 2 திரைப்படத்திலும் ராஷ்மிகாவே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 

இந்நிலையில் புஷ்பா திரைப்படமானது அடுத்த வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


 

From Around the web