போடுற வெடிய..! அக்டோபர் 18 ஆம் தேதியே ‘லியோ’ படம் திரையிடப்படும்..!

 
1

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஒரு சில விஜய் ரசிகர்கள் பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்று அதிகாலை காட்சி பார்க்க திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் தயாரிப்பாளர் லலித் அதிரடியாக ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக தெரிகிறது.

அதாவது ‘லியோ’ திரைப்படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள், பிரீமியர் காட்சிகளாக திரையிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் அக்டோபர் 18ஆம் தேதியே ‘LEO’ திரைப்படம் பிரிமியர் காட்சிகளாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.

From Around the web