”ரொம்ப கஷ்டமா இருக்கு; அழுகையா வருது” சோகத்தில் புகழ்- காரணம் இதுதான்..!!

 
”ரொம்ப கஷ்டமா இருக்கு; அழுகையா வருது” சோகத்தில் புகழ்- காரணம் இதுதான்..!!

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர் மத்தியில் பிரபலமாக நிகழ்ச்சி என்று கேட்டால், எல்லோரும் ஒட்டுமொத்தமாக சொல்லகூடியது குக் வித் கோமாளியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர் வட்டம் தமிழகத்தில் பெரியளவில் உள்ளது.

டி.ஆர்.பி-யில் இந்நிகழ்ச்சியை வீழ்த்தும் அளவுக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் தற்போதைக்கு இல்லை என்று தைரியமாக கூறலாம். தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதே நிகழ்ச்சி கன்னடத்திலும் உருவாக்கப்பட்டு வருகிறது. ”குக் வித் கிறுக்கு” என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஸ்டார் சுவர்னா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இரண்டாவது சீசன் விரைவில் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இனி ஒரு வார நிகழ்ச்சி மட்டுமே பாக்கியுள்ளது. அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. வரும் ஞாயிறன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியின் மூலமே அது தெரிய வரும். நிகழ்ச்சியை பார்வையிடும் ரசிகர்களை விட குக் வித் கோமாளியின் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தான் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் புகழ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் கஷ்டமாக உள்ளது. குக் வித் கோமாளி சீசன் 2 முடிவுக்கு வந்துவிட்டது அனைத்து போட்டியாளர்களையும் மிஸ் செய்கிறேன். நினைத்தால் மிகவும் அழுகையாக வருகிறது என புகழ் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆறுதலாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web