இவருக்கு பதில் இவரா - பாரதி கண்ணம்மா 2-ல் முக்கிய நடிகை மாற்றம்!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் டிஆர்பி பாரதி கண்ணம்மா சீரியல். 

மேலும், இந்த தொடரின் முதல் பாகத்தில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார்கள். பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா திருப்பங்களுடன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி போன்ற முந்தைய சீசன் கதாபாத்திரங்களின் பெயர்களையே இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் சீசனிலும் கண்ணமாவாக முதல் சீசனில் நடித்த நடிகை வினுஷா தேவி நடிக்கிறார்.  

1

பாரதி கண்ணம்மா 2 ஆம் பாகம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது கதைக்களம் விருவிருப்பு அடைந்துள்ளது.இந்த நிலையில்,  அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா தாஸ், இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதால், அவருக்கு பதில் சாய் ரித்து என்பவர் அஞ்சலியாக கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சீரியல் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் நடிகை ஒரு செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

From Around the web