தீபக் காலில் விழுந்த ஜாக்குலின்! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்...!

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது அதில் மாணவர்கள் ஸ்கூல் நிர்வாகம் என பிரிந்து போட்டியாளர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல நடித்து வருகிறார்கள். 

அத்தோடு ஒரு பக்கம் ரகசிய டாஸ்க்கால் வீடு குழம்பி இருக்கிறது, அந்த டாஸ்கில் சில பிரச்சினைகள் எழுகிறது. மற்ற பக்கம் பிரின்சிபல் மேம் சாரி கேட்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இப்படி இருக்க தற்போது அடுத்த ப்ரோமோவில் தரமான சம்பவம் நடந்துள்ளது. 

Bigg Boss Tamil season 8 | Deepak | 24 X 7 | Disneyplus Hotstar

அதாவது ஜாக்குலின் டாக்ஸ் படி டீச்சராக நடிக்கிறார். தீபக் டாக்ஸ் படி மாணவராக நடிக்கிறார். அப்படி பாடம் நடத்தும் போது தீபக் பெயர் குறிப்பிட்டு ஒரு ஓரல் சொல்லி கொடுத்து இருப்பார் ஜாக்குலின் இதனால் தீபக் கொஞ்சம் ரூடாக   நடந்திருப்பார். 

இதனை குறிப்பிட்டு ஜாக்குலின் என்னோட கருத்து படி நான் பாடம் எடுத்தேன். உங்கள குறிப்பிட்டு நான் சொல்ல இல்ல, அப்படி தோணி இருந்தா சாரி என்று திடீரென தீபக் காலில் விழுந்து விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகிறார்கள். இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 

From Around the web