தனுஷின் அசத்தலான குரலில் ஜகமே தந்திரம் பட புதிய பாடல் வெளியீடு..!

 
நேத்து பாடல்

’ஜகமே தந்திரம்’ படத்துக்காக நடிகர் தனுஷ் தனது சொந்த குரலில் பாடியுள்ள ‘நேத்து ஓரக்கண்ணாலே’ பாடல் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘புஜ்ஜி’ மற்றும் ‘ரகிட ரகிட’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘நேத்து ஓரக்கண்ணாலே’ பாடம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாட்டை நடிகர் தனுஷ் எழுதி தன்னுடைய சொந்த குரலில் பாடியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலில் கதாநாயகிடம் நெருங்குவதற்கு காதலன் எடுக்கும் முயற்சிகளை மையமாக வைத்து ‘நேத்து’ பாடல் உருவாகியுள்ளது. ஜகமே தந்திரம் படம் தமிழ் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும், சர்வதேசளவில் பல மொழிகள் என 17 மொழிகளில் வெளிவரவுள்ளது.
 

From Around the web