புதிய சீரியலில் நடிக்க இருக்கும் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன்..! 

 
1
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’நீ தானே என் வசந்தம்’ ’புதுப்புது அர்த்தங்கள்’ ’சீதாராமன்’ உள்ளிட்ட தொடர்களை தயாரித்த ஈஸ்தெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தொடரில் ஜெய் ஆகாஷ் நாயகனாகவும் ரேஷ்மா முரளிதரன் நாயகியாகவும் நடிக்க உள்ளனர்.

’புதுப்புது அர்த்தங்கள்’ தொடரில் நாயகியாக ரேஷ்மா நடித்த நிலையில் அவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்தது. அதேபோல் ஜெய் ஆகாஷ் பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், குறிப்பாக ’நீதானே என் பொன்வசந்தம்’ தொடரில் நாயகனாக நடித்திருந்தார் என்பதும் அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக தர்ஷனா நடித்திருந்த நிலையில் இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருக்கும் புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த தொடரின் முன்னோட்ட வீடியோ இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த தொடர் ஒரு ஹிந்தி தொடரின் ரீமேக் என்றும் ஏற்கனவே இந்த தொடரின் தமிழ் டப்பிங் ’உள்ளம் கொள்ளை போகுதே’ என்ற டைட்டிலில் பாலிமர் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் ஒளிபரப்பான இந்த தொடர் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தான் தமிழிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web