சம்பவம் உறுதி : 'ஜெயிலர் 2' மரண மாஸ் அப்டேட்..!

 
1

2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது 'ஜெயிலர்'. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் என பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருந்த இப்படத்தில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். உலக அளவில் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

'ஜெயிலர்' பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன்பாக சென்னை ராயப்பேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் நடித்தது. ரஜினியின் ஆக்ஷன் காட்சிகளும், யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் படமாக்கப்பட்டன.

இதனையடுத்து பிரேக் விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கிடுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் கோவை கிளம்பி சென்றார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படையப்பா வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்டு 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் முதல் நாள் என பதிவிட்டுள்ளார்.

முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியனின் மனைவியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இதனையடுத்து தற்போது இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளார். அதேபோல் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னாவும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் ரஜினி தனது மகனை சுட்டு கொன்ற நிலையில் இரண்டாம் பாகத்தில் தனது மனைவி, மருமகளிடம் இதுப்பற்றி சொல்வாரா? அதற்கு அவர்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? என்பதை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.


 



ரஜினி தற்போது 'கூலி' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தரமான ஆக்ஷன் படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'கூலி' படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web