அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும் ஜெயிலர்..!!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன.
Jun 18, 2023, 12:05 IST
தொடர் தோல்விகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மிக நம்பிக்கையுடன் காத்திருக்கும் படமாக உள்ளது ஜெயிலர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. வரும் ஆகஸ்டு 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன்படி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஜெயிலர் படத்துக்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். மலையாள நடிகர் விநாயகன், படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவர் தனது பகுதிக்கான டப்பிங்கை துவங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் படத்துக்கான டப்பிங்கை பேசிவிட்டாரா என்று தெரியவில்லை. அதேசமயத்தில் படத்துக்கான பின்னணி இசை பணிகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.