ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதுதான்-வெளியீட்டு தேதி அறிவிப்பு..!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தான் நிறைவுக்கு வந்தது. அதை தொடர்ந்து படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு உள்ளிட்ட ப்ரோமோஷன் பணிகள் துவங்கின.
அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி கடந்த 02-ம் தேதி பாடல் வெளியீடு தொடர்பான ப்ரோமோவுக்கு ப்ரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு வேடிக்கை செய்தது.
இந்நிலையில் பாடல் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலின் பெயர் ‘காவாலா’ ஆகும். அது வரும் ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.