எம்.ஜி.ஆர் பட பாடலின் காப்பி தான் ஜெயிலர் காவாலா பாடலா..??

அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடல், எம்.ஜி.ஆர் பட காப்பி என்று கூறி நெட்டிசன்கள் பலர் சமூகவலைதளங்களில் தகவல் பதிவிட்டு வருகின்றனர்.
 
jailer

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் ‘காவாலா’ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தமன்னாவுக்காக எழுதப்பட்டுள்ள இந்த பாடல், லிரிக் வீடியோவுடன் கிளிம்ப்ஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜா பாடல்களை எழுதியுள்ளார். மிகவும் குதூகலமாக உருவாகியுள்ள இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார்.

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பாடல் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பின்னணி இசையை மையப்படுத்தி இப்பாடல் உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


அந்த பதிவுடன் ஒரு நாடோடி மன்னன் வீடியோவையும் காணக்கிடைக்கிறது. அந்த காட்சியில் வரும் பின்னணியை இசையைக் கேட்கும் போது, காவாலா பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

From Around the web