விநாயகர் பிறந்தநாளுக்கு வருகிறது ஜெயிலர்..!!
பீஸ்ட் படத்தின் தோல்வியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் உருவாக்கி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் ஆகஸ்டு மாதம் துவங்கின. சென்னை, ஹைதராபாத், கடலூர், ஜெய்சல்மார், மங்களூரு, கேரளா உள்ளிட்ட இடங்களில் இந்த படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது.
மேலும் ரஜினிகாந்த் தொடர்பான அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் பாடல் காட்சிகள் பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து விரைவாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு முன்னதாக திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துவிடும் எனவும், அதனால் ஜெயிலர் படத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிக்கைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.