ஜெயிலர் படத்துக்கு பூசனிக்காய் உடைத்த படக்குழு- ரஜினிகாந்த் செம ஹாப்பி..!!
 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதை அடுத்து, ரஜினி உட்பட படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
 
jailer

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கின. அதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு படத்துக்கு ஜெயிலர் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதை தொடர்ந்து படத்தில் ரஜினிகாந்தை தவிர மற்ற நடிகர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன. 

சென்னையில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஹைதராபாத், கடலூர், ஜெய்சல்மார், மங்களூர், சாலக்குடி போன்ற படங்களில் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்தது. கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். 


அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அடுத்த 2 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பிறகு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகும். நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web