’ஜெயிலர்’ சிங்கிள்- சன் பிக்சர்ஸ் கொடுத்த தரமான அப்டேட்..!!
தொடர் தோல்விகளுக்கு பிறகு ரஜினிகாந்த் பெரும் முனைப்புக் காட்டி நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’. கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இயக்கும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, வசந்த்ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்து முடிந்துவிட்ட நிலையில், படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அறிவிக்கப்பட்டபடி ஆகஸ்டு 10-ம் தேதி ஜெயிலர் படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
.@anirudhofficial andha first single…?? ⏳⏰#JailerUpdate @Nelsondilpkumar pic.twitter.com/9Ytc636nDj
— Sun Pictures (@sunpictures) July 1, 2023
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான ஒரு வீடியோவையும் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. டாக்டர் படத்துக்காக நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் பங்கேற்று வெளியிட்ட காமெடி வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.