திடீரென சுருண்டு விழுந்த ஜான்வி கபூர்..! என்ன ஆச்சு?

 
1

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என்பதும் இவர் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. மேலும் இவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதை அடுத்து தற்போது அவர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனை வேடத்தில் நடித்த ’மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மகி’ என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்காக ஜான்வி கபூர் நாடு முழுவதும் ப்ரமோஷன் சென்று வருகிறார்.

மேலும் இந்த படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரில் நடிப்பதற்காக ரொம்ப கஷ்டப்பட்டதாகவும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி செய்ததாகவும் முதலில் பந்தை தன்னால் பேட்டால் அடிக்க முடியவில்லை என்றும் அதன் பிறகு பல சவால்களை சந்தித்து பேட்டிங் செய்ய பழகிக்கொண்டதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

அந்த வீடியோவில் அவர் பேட்டிங் செய்தபோது திடீரென தோள்பட்டை வலி ஏற்பட்டதால் சுருண்டு விழுந்த காட்சியும் அதன் பின்னர் மருத்துவர் அவருக்கு முதலுதவி செய்யும் காட்சியும் உள்ளது. இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து அவர் கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரில் நடித்துள்ளதை அடுத்து இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web