மஞ்சள்வெயில் மாலையில் கடற்கரையில் பிகினி உடையில் ஜான்வி..!

 
மஞ்சள்வெயில் மாலையில் கடற்கரையில் பிகினி உடையில் ஜான்வி..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில், கடற்கரையில் எடுக்கப்பட்ட படு கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வைரல் செய்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். அதை தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், குன்ஞன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ரூஹி’என்கிற படம் வெளியாகி திரையரங்குகளில் வரவேற்பை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து கார்த்திக் ஆர்யனுடன் தோஸ்தானா 2 மற்றும் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘குட் லக் ஜெர்ரி’ ஆகிய படங்களில் ஜான்வி நடித்து வருகிறார். 

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி, கடற்கரையில் மஞ்சள் வெயிலில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது பாலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், சினிமாவில் இன்னும் முழுமையாக காலூன்றாத போது, அதற்குள் இவ்வளவு கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை ஜான்வி பதிவிடுவது தேவையில்லாத வம்பு என்கிற ரீதியிலும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web