சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி- உறுதி செய்த படக்குழு..!!

நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த சகோதரரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான கார்த்தி, தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், நவநீத், ஆஷ்னா சுதீர், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், ஜப்பான் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எனினும், இந்த படம் தொடர்பான எந்தவித அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக ஜப்பான் திரைப்படத்தின் சிறு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜப்பானின் சிறப்பு முன்னோட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதால பலரும் வீடியோவுக்கு கீழ் கமிட் செய்து வருகின்றனர்.