நான் இசையமைத்ததில் சிறந்தது ‘ஜவான்‘ பட இசை தான் – அனிருத் விளக்கம்

 
1

தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தற்போது ‘இந்தியன்-2, ஜெயிலர், லியோ, ஏகே 62‘ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் மற்றும் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, சஞ்சய் தத், விஜய் சேதுபதி, யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படம் ஜூன் 2-ம் தேதியன்று வெளிவருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,“ இதுவரை நான் பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்து இருந்தாலும், இந்த ஜவான் படத்திற்கு கம்போஸ் செய்துள்ள பின்னணி இசை தான் இதுவரை நான் இசையமைத்ததில் சிறந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த படத்தின் பின்னணி இசை என்னிடமிருந்து சிறப்பாக வெளிப்பட்டுள்ளது“ என்று கூறியுள்ளார் அனிருத்.

From Around the web