‘ஜவான்’ டிரெய்லர் வெளியீடு- தம்பி அட்லீ என்னப்பா பண்ணி வச்சிருக்க நீ...??
கடந்த 2020 மற்றும் 21-ம் ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆஃப்ஸில் படுதோல்வியை தழுவின. இதனால் மனமுடைந்த ஷாரூக் குறிப்பிட்ட இயக்குநர்களிடம் கதைக் கேட்டு 3 கதைகளை மட்டுமே ஓ.கே செய்து வைத்திருந்தார்.
அவை பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய படங்களே ஆகும். கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான் படம் மாபெரும் ஹிட்டடித்தது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டும் ரூ. 225 கோடி மட்டுமே. ஆனால் தற்போது வரை இதனுடைய மொத்த வசூல் ரூ. 1060 கோடியாகும். பாக்ஸ் ஆஃபிஸை துவம்சம் செய்யும் அளவுக்கு பதான் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
இதையடுத்து ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜவான்’. தமிழ் சினிமாவைச் சேர்ந்த அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒட்டுமொத்த இந்தியளவிலும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நயன்தாரா, ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், தீபிகா படுகோன் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள ஜவான் பட டிரெய்லர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளிவரவுள்ளது.
வரும் செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் ஜவான் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்துக்கு இந்தியை விடவும் தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.