மிரட்டலாக வெளியான ஜவான் பட ட்ரைலர்..! 

 
1

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இதனை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ இயக்கியுள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியா மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்பாக படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தது.

தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரின் மூலம் சாருக் கான் இதில் அப்பா, மகன் என்ற இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நயன்தாராவும், மகனாக நடித்துள்ள ஷாருக்கானும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இதுவரை இல்லாத தோற்றத்தில் காணப்படுகிறார். அவரின் கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


 

From Around the web