ஐஎம்டிபி இணையத்தில் புதிய மைல்கல்லை எட்டியது ‘ஜெய் பீம்’..!!

 
1

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘ஜெய் பீம்’. இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது ஐஎம்டிபி இணையத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது 'ஜெய் பீம்'. இந்த இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு படங்களின் விமர்சனங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும்.

Jai-bhim-becomes-first-tamil-film

இந்த இணையத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாக ‘தி ஷஷாங் ரிடம்ஷன்’ இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘டார்க் நைட்’, ‘2 ஆங்கிரி மேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ‘3 இடியட்ஸ்’, ‘தாரே ஜமீன் பர்’, ‘லகான்’, ‘தங்கல்’, ‘அந்தாதூன்’ உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இடம்பெறாமல் இருந்தது.

தற்போது முதன் முறையாக ஐஎம்டிபி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘ஜெய் பீம்’. இப்படம் 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் படத்துக்குப் பின் ‘தி ஷஷாங் ரிடம்ஷன்’ படம் 9.3 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

IMDB

‘தி ஷஷாங் ரிடம்ஷன்’ படத்துக்கு 24 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. ஆனால், ‘ஜெய் பீம்’ படத்துக்கு 53,000 வாக்குகள் தான். ஆகையால் வரும் காலத்தில் இதில் மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது.

From Around the web