இயக்குநர் அட்லீயின்  படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்..?

 
ஜெய்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான அட்லீ தயாரிக்கும் புதிய படம் பிரபல நடிகர் ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கினார்.

அடுத்ததாக இவர் ஷாரூக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மனைவி ப்ரியா உடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனத்தையும் அட்லீ நிர்வகித்து வருகிறார். சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்களை இவர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தன்னுடைய அடுத்த படத்திற்கான தயாரிப்பு பணிகளை அட்லீ துவங்கவுள்ளார். இந்த படத்தில் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அட்லீயுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவர் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

From Around the web