ஜெயலலிதாவின் முதல் ஹீரோ காலமானார்..!

 
ஸ்ரீகாந்த்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 84.

கடந்த 1965-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் தமிழில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’. இந்த படம் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதல் படமாகும். மேலும் இந்த படத்தில் நிர்மலா, மூர்த்தி உள்ளிட்டோரும் நடிகர்களாக அறிமுகமாகினர்.

இதே படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் ஸ்ரீகாந்த். சினிமா நடிப்பதற்கு முன்பு சென்னை அமெரிக்க தூதரகத்தில் ஆரம்ப நிலை ஊழியராக பணியாற்றி வந்தார். சினிமா வந்த பிறகு அந்த வேலையை விடுத்தார்.

தமிழில் எண்ணற்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஸ்ரீகாந்த், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்துள்ளார். இவர் கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்திருந்தார்.

சென்னை எல்டாம்ஸ் சாலையில் மனைவியுடன் ஸ்ரீகாந்த் வசித்து வந்தார். வயது முதுமையின் காரணமாக அவ்வப்போது உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அவர் காலமானார். நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

From Around the web